தமிழ்நாடு

வேளாண் மசோதாவை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணகிரியில் சாலை மறியல்

25th Sep 2020 03:56 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்டம் மசோதாவை ரத்து செய்யக்கோரி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆர். சபாபதி தலைமை வகித்தார், விவசாயச் சங்க செயலாளர் ஜி. முத்துக்குமார், விவசாயச் சங்க பொருளாளர் எஸ். பொன்னுசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிபிஎம் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி. பிரகாஷ், சிபிஎம் வட்டச் செயலாளர் கே. மகாலிங்கம், பால் சங்க மாவட்டச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் விளக்க உரை ஆற்றினார். 

அதில் கரோனா பாதிப்பில் வாழ்வாதாரத்தை இழந்து . இந்திய விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய பாஜக அரசு விவசாயத்தையும் விவசாயிகளின் நலன்களையும் கார்ப்பரேட் பெரும் முதலாளிகளிடம் ஒப்படைத்து 3 வேளாண் சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்றியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் வழி வகுக்கும். 

ADVERTISEMENT

வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் மூலம் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிப்பதிலிருந்து அரசு விலகிக் கொண்டது, இனி கார்ப்பரேட் பெருமுதலாளிகள் வைத்ததுதான் விலை, எதை விளைவிப்பது விலை எவ்வளவு என்பதைக் கூட கார்ப்பரேட் பெரு முதலாளிகளே தீர்மானிக்கும் ஒப்பந்த சாகுபடி முறைக்கு வழிவகுத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம், இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சாரத் திருத்தச் சட்ட மசோதா கொண்டு வர முயற்சி ஆகியவற்றைக் கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை ஊத்தங்கரை காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT