தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்

25th Sep 2020 12:01 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி இந்தியன் வங்கி அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமன் முன்னிலை வகித்தார். 

இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள வேளாண்மை மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கும் வகையில் மின்சார திருத்த சட்ட மசோதாவை கொண்டு வருவதை திரும்ப பெற்றிடவும். ஆண்டிபட்டி இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான முல்லைப் பெரியாறு வாய்க்கால் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

ADVERTISEMENT

மேலும் இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதா நகலை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags : Road blockade
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT