தமிழ்நாடு

சேரடி முதல் வேலிக்காடு வரை தார்ச் சாலை: கொல்லிமலை மக்கள் வேண்டுகோள்

DIN

தம்மம்பட்டி: சேரடி முதல் வேலிக்காடு வரை தார்ச் சாலை அமைத்து தருமாறு கொல்லிமலை வாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியிலிருந்து கொல்லிமலைக்கு, சேரடி ,வேலிக்காடு வழியே செல்லலாம். இதில் மேலே மலையிலிருந்து வேலிக்காடு கிராமம் வரை உள்ள மண் சாலை தற்போது தார்ச்சாலையாக்கும் பணி நடந்து வருகிறது. 

இந்நிலையில், அடிவார ஊரான சேரடி (சேலம் மாவட்டம்) யிலிருந்து,கொல்லிமலை ஏறும் வழியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலிக்காடு என்ற கிராமம் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை ,கொண்டை ஊசி வளைவுகளுடன் மண் சாலையாக உள்ளது. 

வேலிக்காடு முதல் மேலே மலை வரை தார்ச்சாலை போடப்பட்டுவிடும் நிலையில்,கொல்லிமலை அடிவாரத்திற்கு வரும் வரை கடைசி 2 கி.மீ. தூர சேலம் மாவட்ட எல்லைக்குள்பட்ட சாலையை தார்ச்சாலையாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கொல்லிமலையிலிருந்து அடிவார ஊரான சேரடி வரை முழுமையாக தார்ச்சாலை இருக்கும் நிலை ஏற்படும். போக்குவரத்தும் தங்கு தடையின்றி இருந்துவரும்.

இதுகுறித்து சேரடி கிராம மக்கள் கூறியதாவது: சேரடியிலிருந்து மலை ஏறும் 2 கி.மீ.தூர மண்சாலை ,தார்ச்சாலையாக்கினால், நாங்கள் கொல்லிமலைக்கு மேலே செல்லவும், கொல்லிமலையில் வாழும் மக்கள், மலையில் தங்கள் விளைபொருள்களை, கீழே உள்ள வியாபார தலமான தம்மம்பட்டிக்கு எளிதாக கொண்டுவந்து விற்றுச்செல்லவும் இயலும். எனவே,சேரடி-வேலிக்காடு மண்சாலையை விரைவில் தார்ச்சாலையாக்கிட வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT