தமிழ்நாடு

தருமபுரியில் வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக் கோரி மறியல்

DIN

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி, விவசாயிகள் சங்கங்கள் சார்பில், தருமபுரி நான்கு முறை சாலை சந்திப்பு அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.என்.மல்லைமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னசாமி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இந்த மறியல் போராட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்த மசோதா, வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்ட மசோதா, விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்ட மசோதா, தேசிய மின்சாரத் திருத்தச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 50 பேரை காவல்துறை கைது செய்தனர். இதேபோல தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய இடங்களிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT