தமிழ்நாடு

அரியலூரில் நகைக்கடையின் சுவரை துளையிட்டு 50 பவுன் நகைகள் திருட்டு

25th Sep 2020 11:29 AM

ADVERTISEMENT

 

அரியலூ: அரியலூர் நகரிலுள்ள ஒரு நகைக் கடையின் சுவரை துளையிட்டு 50 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவலர்கள் தேடிவருகின்றனர்.

அரியலூர் காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன்(70). இவர் அரியலூர் சின்ன கடை வீதியில் பாலாஜி என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இவர், வியாழக்கிழமை இரவு வியாபாரம் முடித்து விட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை, இவரது நகைக்கடையின் அருகே தேங்காய் கடை வைத்துள்ள ராமலிங்கம் என்பவர் தனது கடையை திறந்த போது நகைக்கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு இருப்பது கண்டு சௌந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மர்ம நபர்கள் நகைக்கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு  50 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.

இதையடுத்து சௌந்தராஜன், அரியலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தவுடன், கடைக்குச் சென்று பார்த்த போது உள்ளே ஒரு லாக்கரில் மட்டும் வைத்திருந்த 50 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. காவல் துணைக் கண்காணிப்பாளர் மதன்,அரியலூர் காவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

செந்துறையில்...
செந்துறை கடைவீதியில் அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார்(44) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்புறம் உள்ள சுவற்றினை மர்மநபர்கள் துளையிட்டு திருட முயற்சித்திருப்பதும் வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கடையின் அருகேவுள்ள வீட்டில் இரவு விளக்கு (லைட்) போட்டதால் மர்மநபர்கள் தப்பி சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆசிரியர் வீட்டில் திருட்டு...
செந்துறையில் மர்மநபர்கள் திருட முயற்சித்த நகைக்கடையின் எதிரே உள்ள ஆசிரியரான தர்மலிங்கம்(50) வீட்டில் மர்ம நபர்  உள்ளே புகுந்து 3 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை திருடி சென்றிருப்பதும்  வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் செந்துறை காவலர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பெரம்பலூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் மலர் நகைக்கடையிலிருந்து ஆசிரியர் வீட்டுக்கு சென்று பின்னர் செந்துறை ரயில் நிலையம் சென்றதால், நகைக்கடையில் திருட்டு முயற்சி, ஆசிரியர் வீட்டில் திருடியது ஒரு கும்பலாக இருக்கலாம் என காவலர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT