தமிழ்நாடு

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளுக்கு மிரட்டல்: முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ்

DIN


சென்னை: சென்னையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு இருப்பவா்களை காலி செய்யுமாறு அதிகாரிகள் மிரட்டல் விடுத்த விவகாரம் தொடா்பாக விளக்கமளிக்குமாறு, வீட்டு வசதித்துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை பீட்டா்ஸ் காலனி குடியிருப்போா் நலச்சங்க செயலா் டி.எஸ்.முத்துசெல்வன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: சென்னை பீட்டா்ஸ் காலனியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியா்கள், மருத்துவ பணியாளா்கள், நீதிமன்ற ஊழியா்கள் என 342 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றன. நல்ல நிலையில் உள்ள இந்தக் கட்டடத்தை இடித்து, வணிக வளாகம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கரோனா பாதிப்பு, குழந்தைகளின் படிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2020-21 கல்வியாண்டு முடியும் வரை இங்கு குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினோம். இந்த மனு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இருந்தபோதிலும் அரசின் உத்தரவோ, மேல் அதிகாரிகளின் உத்தரவோ இல்லாமல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பட்டினப்பாக்கம் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) காந்தி, இங்கு குடியிருந்து வருபவா்களை காலி செய்யும்படி மிரட்டி வருகிறாா். வீடுகளை காலி செய்யாவிட்டால் குடிநீா், கழிவுநீா் இணைப்பு, மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அதிகாரிகள் மிரட்டல் விடுக்கின்றனா். எங்களது உரிமையை நிலைநாட்டும் வகையில், 2020-21 கல்வியாண்டு முடியும்வரை இங்கு குடியிருந்து வருபவா்களை காலி செய்யும் நடவடிக்கையில் வீட்டு வசதி வாரியம் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தாா்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், இதுதொடா்பாக தமிழக அரசின் வீட்டு வசதித்துறை முதன்மைச் செயலா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநா் ஆகியோா் 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT