தமிழ்நாடு

இளையான்குடி அருகே மூலிகைத் தோட்டம் திறப்பு விழா 

25th Sep 2020 11:39 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூரில் மூலிகை தோட்டம் திறப்பு விழா நடைபெற்றது. 

பரமக்குடியைச் சேர்ந்த சித்தமருத்துவர் வரதராஜன் என்பவர் இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் என்ற இடத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கடந்த 8 ஆண்டுகளாக அடர் மூலிகை வனத்தை உருவாக்கி வந்துள்ளார். சித்த மருத்துவத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தாவரங்கள், மரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை இயற்கை  முறையில் வளர்த்து வந்துள்ளார். மூலிகை மூலம் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க சூரிய சக்தி குளியல் தொட்டி உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளார்.  

பொதுமக்களும் இயற்கை மூலிகை மூலம் செய்யப்படும் சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தோட்டத்தை அனைவரும் பார்வையிட வசதியாக அதற்கான திறப்பு விழா நடந்தது. 

ADVERTISEMENT

மானாமதுரை ஒன்றிய குழுத் தலைவர் லதா அண்ணாத்துரை குத்துவிளக்கேற்றி வைத்தார் மூலிகை தோட்டத்தை  பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் திறந்து வைத்தார். 

விழாவில் அரிமா சங்கத்தின் முதல் நிலை துணைஆளுநர் வி.ஜெயந்நாதன் மருத்துவர்கள் ஆர் அசோக்குமார் வி.புகழேந்தி குருநாதன் கோவில் சிற்பி ஸ்தபதி தெளிச்சாத்தநல்லூர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

முதல் நாள் ஏராளமான பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவ முகாம் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. சித்த மருத்துவர் வரதராஜன் தலைமையிலான குழுவினர் சிகிச்சையளித்தனர்.

Tags : Herbal Garden Open
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT