தமிழ்நாடு

கலவையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 45 பேர் கைது

25th Sep 2020 02:38 PM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விளைபொருள்களுக்கான உத்தரவாத சட்டம் அத்தியாவசிய உணவு பொருள் சட்டம் விவசாயிகளுக்கு எதிராகவும் கார்ப்பரேட்டுகளுக்கு உள்ளதாகவும் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ரகுபதி தலைமை வகித்தார்.

இதில், திமிரி வட்டார தலைவர் ஆதி மூலம் செயலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 45 பேரை கலவை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT

Tags : protest
ADVERTISEMENT
ADVERTISEMENT