தமிழ்நாடு

திருச்சியில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

25th Sep 2020 11:20 AM

ADVERTISEMENT


திருச்சி; திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன முறையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்கங்கள் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று முற்றுகையிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரை நிர்வாண கோலத்துடன்,  கைகளில் மண்டையோடு ஏந்தியும்,ஏர் உழவு மாடுகளுக்கு பதிலாக விவசாயிகளை கட்டியும், கழுத்தில் சுருக்கு கயிறு அணிந்தும் பல்வேறு வடிவங்களை சித்தரிக்கும் வகையில் விவசாயிகள் அணிவகுத்து நின்றனர். மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். 

ADVERTISEMENT

முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காவலர்கள் விவசாயிகளை சுற்றி கயிறு கட்டி சாலைக்கு வந்து விடாமல் தடுத்து நிறுத்தினர். 

இந்த போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது. 

இதேபோல  ஜீயபுரம், உப்பிலியாபுரம், திருவரம்பூர், மணப்பாறை, துறையூர் லால்குடி,மருங்காபுரி என மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு அமைப்பினர், தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT