தமிழ்நாடு

சின்னமனூர், கோம்பையில் வேளாண் மசோதாவை கண்டித்து மறியல்: 91 பேர் கைது

25th Sep 2020 01:16 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் சின்னமனூர் கோம்பை பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற சாலை மறியலில் 91 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சின்னமனூரில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 11 பெண்கள் உள்பட 51 பேர் கலந்துகொண்டனர். தடையை மீறி நடைபெற்ற சாலை மறியலைத் தொடர்ந்து சின்னமனூர் போலீசார் இவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

அதேபோல கோம்பையில் உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியலில்  42 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சாலை மறியலால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT