தமிழ்நாடு

2018-19 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அபராதத்துடன் தாக்கல் செய்ய செப். 30 கடைசி

DIN

சென்னை: கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய கால அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் கணக்கு தாக்கல் செய்ய வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கடந்த 2018- 19-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.

அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிகழாண்டில் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT