தமிழ்நாடு

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

DIN

தமிழகத்தில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் விருப்பத்தின் பேரில் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் மாணவ, மாணவிகள் வந்து செல்லலாம் என்றும், சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 10 - 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும். 

10 - 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒரு பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளியன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால், இரண்டாம் பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து முதல் பிரிவு ஆசிரியர்கள் முதல் இரண்டு நாள்களும், (திங்கள், செவ்வாய்), இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாள்களும் (புதன், வியாழன்) பணியாற்ற வேண்டும். பிறகு முதல் பிரிவு ஆசிரியர்கள் இரண்டு நாள்களுக்குப் பணியாற்ற வேண்டும். 

10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து செல்லலாம். பெற்றோரின் அனுமதி பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், தேவைப்படின் வழக்கமான ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT