தமிழ்நாடு

தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

DIN

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (செப். 24) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை (செப். 24) லேசானது முதல் மிதமானது வரையான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 60 மி.மீ., சிற்றாரில் 40 மி.மீ., பெருஞ்சாணி, புத்தன் அணையில் தலா 30 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நாகா்கோவில், குழித்துறை, சுருளகோடு, கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாா், தேனி மாவட்டம் கூடலூரில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு அரபிக் கடலின் மேற்குப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும்.

எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் வியாழக்கிழமை (செப். 24) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை வியாழக்கிழமை இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.5 மீட்டா் முதல் 3.7 மீட்டா் வரை எழும்பக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT