தமிழ்நாடு

'விழிப்புணர்வோடு இருந்தால் குற்றங்களைத் தடுக்க முடியும்'

23rd Sep 2020 12:35 PM

ADVERTISEMENT

 

பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் விழிப்புணர்வோடு இருந்தால் குற்றங்களை வெகுவாக குறைக்க முடியும் என காஞ்சிபுரம் காவல் துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி வலியுறுத்தினார்.

திருவள்ளூர் அருகே அரண்வாயல்குப்பத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் காவல் துறை சார்பில் பணிபுரியும் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து காவல்துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி பேசுகையில், 
தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கப் பெற்றோர்கள், பெண் குழந்தைகளைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக பெண்களும், குழந்தைகளும் போதிய விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே குற்றங்கள் வெகுவாக குறையும். அதற்கு நாம் எப்படிப் பாதுகாப்பு உணர்வுடன் இருப்பது தொடர்பாகவும் விளக்கமாக எடுத்துரைப்பதன் மூலமாகவும் பாலியல் தொல்லை தரும் குற்றவாளிகளிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

ADVERTISEMENT

மேலும், பாதுகாப்பற்ற தேவையில்லாத தொடுதல் முறை குறித்தும் பெண் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். அதேபோல், 3 வயது முதல் 18 வயது வரையிலான பெண் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டுச் செல்லும் போது, துணைக்கு யாராவது ஒருவரை விட்டுச் செல்வது அவசியம். அதைத் தொடர்ந்து 10 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட ஆண், பெண் குழந்தைகள் பயன்படுத்தும் செல்லிட பேசிகளை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். அதிகமான நேரங்களில் குழந்தைகளைப் பெற்றோர்கள் தனியே விடக்கூடாது. 

அதற்கு முன்னதாக வயது வந்த தங்கள் மகன், மகளின் நண்பர்கள் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும். அதோடு, பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்களைப் பெற்றோர்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் குழந்தைகளை கட்செவி, முகநூல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தவும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் 500}க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பெண்கள் பங்கேற்ற நிலையில், பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பாலியல் வன்கொடுமை குறித்த குறும்படம் திரையிடப்பட்டுக் காண்பிக்கப்பட்டது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மீனாட்சி, முத்துக்குமார், துணைக்காவல் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன், பெண் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT