தமிழ்நாடு

கொடைக்கானல் பேத்துப்பாறை குடியிருப்பு பகுதியில் வந்த ஒற்றை காட்டு யானை

23rd Sep 2020 04:07 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடமாடும் ஒற்றை காட்டு யானையால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் அடிக்கடி ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வருவதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, பலா, மூங்கில், கொய்யா மற்றும் விவசாய பயிர் வகைகள் முற்றிலும் சேதமடைந்து வருகின்றது.

இந்த நிலையில் மீண்டும் அதிகாலை பேத்துப்பாறை பகுதிகளில் உலவிய ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களைச் சேதப்படுத்தியுள்ளது இதனைத் தொடர்ந்து அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்று ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்கு விரட்டினர்.

ADVERTISEMENT

இதனையடுத்து அப்பகுதி மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இருப்பினும் பொது மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானை போன்ற வன விலங்குகள் வராதவாறு வனப்பகுதி முழுவதும் மின் வேலி அமைக்க தமிழக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT