தமிழ்நாடு

கரோனா தடுப்பு: ரூ. 1,000 கோடியை விடுவிக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

23rd Sep 2020 10:52 PM

ADVERTISEMENT


கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 1,000 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்பட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 1,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வைத்த 

ஆலோசனையின்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"தமிழக மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 3,000 கோடி நிதித் தொகுப்பை மத்திய அரசு அளிக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1,000 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். 

ADVERTISEMENT

Tags : TN CM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT