தமிழ்நாடு

பாரம் அனுப்புபவரே, அபராதத்தைச் செலுத்த வேண்டும்: சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம்

23rd Sep 2020 03:53 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிர்வாக குழுக்கூட்டத்தில் அரசு விதிகளைப் பின்பற்றாமல் ஐவுளி பாரம் ஏற்றினால் அதற்கு விதிக்கப்படும் அபராத தொகையை சரக்கு அனுப்புபவர்தான் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி.செல்வராஜூ இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். செயலர் கே.கே.நடேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் என்.மோகன்குமார், துணைத்தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், இணைச் செயலர் எம்.சின்னதம்பி, நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 

அரசு நிர்ணயித்துள்ள 3.8மீட்டர் உயரமும், 2.6 மீட்டர் அகலமும், 12 மீட்டர் நீளமும் உள்ள ஐவுளி பாரங்களை ஏற்ற வேண்டும். அதற்கு மேல் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பாரங்களை ஏற்றினால் விதிக்கப்படும் அபராத தொகையை சரக்கு அனுப்பியவர்தான் செலுத்த வேண்டும், வாகனங்களுக்கு ஏற்று, இறக்கு கூலிகள் இல்லாமல் வண்டியில் உள்ள எடைக்கு வாடகை கொடுக்க வேண்டும், பாரம் ஏற்றவும் , இறக்கவும் வாகனம் இடத்திற்கு வந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் லாரியை அனுப்ப வேண்டும். 

ADVERTISEMENT

 சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வி.செல்வராஜூ.

அதற்குமேல் காலதாமதம் ஏற்படும் போது காத்திருப்பதற்கு வாடகை கொடுக்க வேண்டும்,  உள்ளூர் பராம் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வண்டியை அனுப்பக் கூடாது, தவிர்க்க முடியாமல் வாகனங்களை அனுப்பும் பட்சத்தில் அதற்கு கிலோ மீட்டர் அடிப்படையில் வாடகை வழங்க வேண்டும், லாரி உரிமையாளர்களுக்கு பாரம் ஏற்றியவுடன் மொத்த வாடைகையில் 80 சதவீதம் முன்தொகையும், பாரம் இறக்கியவுடன் மீதம் உள்ளதொகையை 24 மணி நேரத்தில் வாகனத்தின் உரிமையாளர்கள் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும், பாரங்கள் ஏற்றவோ, இறக்கவோ லாரியின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களையோ பயன்படுத்தக்கூடாது, பாரங்கள் ஏற்றிச்செல்லும் வழியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், அவ்வவ்போது திருட்டுகளும் நடப்பதால் வாகனத்தில் ஏற்றப்படும் பாரங்களின் மதிப்பு அதிகம் இருப்பதால் சரக்குகளின் உரிமையாளர் தான் அவருடைய செலவில் பொருள்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும், அதற்கு லாரி உரிமையாளர்கள் பொறுப்பு அல்ல என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இத்தீர்மானங்களை வலியுறுத்தி ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் துரைசாமி இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். 

ஈரோடு கூட்ஸ் புக்கிங் அசோசியேசன், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், ஈரோடு லாரி புக்கிங் அசோசியேசன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அச்சங்கத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளக்கிக் கூறினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT