தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு : நவ.10 இல் இறுதி விசாரணை

DIN

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 18- ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் தொடா்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் நவம்பா் 10-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி காலமானாா். இதனைத் தொடா்ந்து தமிழக முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீா்செல்வம் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். பின்னா், எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்ற கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

இதனை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்திருந்தனா். மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த நாங்கள் கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்காத பேரவைத் தலைவா் திமுக உறுப்பினா்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாா். இது சட்டவிரோதமானது எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் இறுதி விசாரணையை வரும் நவம்பா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT