தமிழ்நாடு

திருச்சுழி குண்டாற்றில் சமயச்சடங்குகள் செய்யுமிடமருகே கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

23rd Sep 2020 01:20 PM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்றில் பக்தர்கள் சமயச்சடங்குகள் செய்யுமிடத்தில் குளம்போல கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடான சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய கரோனா சூழலில் புரட்டாசி மஹாளய அமாவாசை உள்ளிட்ட முக்கிய விழா நாள்களில் மட்டும் திருச்சுழி குண்டாற்றில் பொதுமக்கள் சமயச்சடங்குகள் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி பிற நாள்களில் திருச்சுழி சுற்றுவட்ட மாவட்டங்கள் மற்றும் ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் குண்டாற்றுப் பாலமருகே உள்ள தனியிடத்தில் நீராடிவிட்டு, ஆற்றுப்படுகையில் உள்ள காலியிடத்தில் அர்ச்சகர்கள் மூலம் இறந்தோர்களுக்கான சமயச்சடங்குள் செய்வது வழக்கம்.

ஆனால், இவ்விதம் சமயச்சடங்குகள் செய்யுமிடமருகே கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போலத் தேங்கி நிற்கிறது. மேலும், அந்நீரில் உணவுக் கழிவுகள் கொட்டப்படுவதால் அதை உண்பதற்கு பன்றிகள், நாய்கள் உள்ளிட்டவை  வருகின்றன. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பக்தர்கள் முகம் சுழிக்கும் சூழல் ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

எனவே, சமயச் சடங்குகள் செய்யுமிடத்தில் கழிவுநீர் தேங்காத வண்ணம் தடுத்து பக்தர்களுக்கு சுகாதாரமான சூழலை ஏற்படுத்தித்தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : விருதுநகர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT