தமிழ்நாடு

வெள்ளக்கோவிலில் ரூ.93 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

23rd Sep 2020 03:01 PM

ADVERTISEMENT

 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.93 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி வரை ஏலம் நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூர், வாணியம்பாடி, லாலாப்பேட்டை, திருப்பத்தூர், வில்வாதம்பட்டி, அரவக்குறிச்சி, பழனி, மூலனூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து 233 விவசாயிகள் தங்களுடைய 1,793 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர். இவற்றின் எடை 89,432 கிலோ. காங்கயம், முத்தூர், மூலனூர், தாராபுரம், நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 21 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர்.

விலை கிலோ ரூ.78.95 முதல் ரூ.119.70 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.118.65. விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.93 லட்சத்து 34 ஆயிரத்து 304 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT