தமிழ்நாடு

100% கட்டணத்தை வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 

23rd Sep 2020 04:05 PM

ADVERTISEMENT


சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி 100% கட்டணத்தை வசூலித்த தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பள்ளிகள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பள்ளிக் கட்டணத்தில் முதல் தவணையை செலுத்த செப்டம்பர் 30-க்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

100% கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்ததாக பெற்றோர்களிடம் இருந்து வந்த 111 புகார்களில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை. 9 பள்ளிகள் மொத்த கட்டணத்தையும் செலுத்துமாறு நிர்பந்தித்ததாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த 9 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 100% கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகள் மீது புகாரளிக்க மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அது பற்றி விளம்பரம் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Tags : school fees high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT