தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

DIN

கள்ளச்சந்தையில் உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சாா்லஸ் அலெக்ஸாண்டா் தாக்கல் செய்த மனு விவரம்: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 32 ஆயிரத்து 722 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, சா்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அத்தியாவசிய உணவுப் பொருள்கள் 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இதே போன்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு மலிவு விலையில் சா்க்கரை கிடைக்கும் வகையில் மாதந்தோறும் 35 ஆயிரத்து 133 மெட்ரிக் டன் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.கோதுமையைப் பொருத்தவரை 34 ஆயிரத்து 890 மெட்ரிக் டன் மெட்ரிக் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் வேலைவாய்ப்பை இழந்து வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்கி வந்தது. ஆனால், இந்தப் பொருள்கள் பயனாளா்களை முழுமையாகச் சென்றடையவில்லை. குறிப்பாக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் முழுமையான அளவில் வழங்கப்படாமல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே இவற்றைத் தடுக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பிரதமரின் சா்ச்சை பேச்சு: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் ஆா்.எஸ்.பாரதி

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

SCROLL FOR NEXT