தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை

23rd Sep 2020 06:10 PM

ADVERTISEMENT

 

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் கவிஞா் மாளிகையில் உள்ள பத்தாவது தளத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விற்பனை இயந்திரங்களையும் மாற்றம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையுடன் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  ஆா்.காமராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களும் உணவுத் துறை செயலாளா் தயானந்த் கட்டாரியா, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் சஜன்சிங் சவான் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
 

Tags : tn cm palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT