தமிழ்நாடு

திருவாரூர் அருகே எண்ணெய்க் குழாய் உடைப்பு: சம்பா பயிர் பாதிப்பு

23rd Sep 2020 10:27 AM

ADVERTISEMENT

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

திருவாரூர் அருகே எருக்காட்டூரில் தனசேகரன் என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார். அவரது நிலத்தின் வழியே அந்த பகுதியில் செயல்படும் 5-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயானது, குழாய் மூலம் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி தனசேகரன் தனது நிலத்தின் வழியே செல்லும் கச்சா எண்ணெய்க்  குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் கச்சா எண்ணெய் பரவி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ADVERTISEMENT

இவரது விவசாய நிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல எண்ணெய்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு விளை நிலம் பாதிக்கப்பட்டது. அதற்கு உரிய இழப்பீடும் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் சரிவர வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியில் அடிக்கடி விளைநிலங்கள் வழியே செல்லும் எண்ணெய்க் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் சேதம் அடைவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags : திருவாரூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT