தமிழ்நாடு

ஊத்தங்கரையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

23rd Sep 2020 12:19 PM

ADVERTISEMENT

 

ஊத்தங்கரை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு பணியாளர்கள் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசுப் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்குத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார், சிஐடியு சங்கச் செயலாளர் தவமணி , ஏஐடியுசி சங்க துணைத்தலைவர் அழகிரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர், 

ADVERTISEMENT

தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொது முடக்கக் காலத்திற்குச் சம்பளம் வழங்கு, ஆட்குறைப்பு, பணிநீக்கம், சம்பள குறைப்பு செய்யாதே, கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு நலவாரியங்களில் பதிவு செய்ய மற்றும் புதுப்பிக்கக் கொடூர நிபந்தனைகளை விதிக்காதே, பொது முடக்கக் காலத்திற்கு அனைத்து குடும்பங்களுக்கும் மூன்று மாதங்களுக்கு ரூபாய் 22,500 வழங்கு, நாடு முழுவதும் அமலில் உள்ள 144 தடை உத்தரவை உடனடியாக ரத்து செய்ய உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT