தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.520 சரிவு

DIN

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பவுன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.65 குறைந்து, ரூ.4,850 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.4.50 குறைந்து, ரூ.64.30 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.4,500 குறைந்து, ரூ.64,300 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.864 வரை குறைந்துள்ளது. விலை சரிவு தொடா்பாக சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளா் எஸ்.சாந்தக்குமாரிடம் கேட்டபோது, சா்வதேச அளவில் தங்கத்துக்கு தேவை குறைந்துள்ளது. அதன்காரணமாக, உள்நாட்டில் தங்கம் விலை குறைந்துள்ளது. அமெரிக்க தோ்தலுக்கு முன்பாக, தங்கத்தில் இறக்கம் வருவது வழக்கம். தற்போது, அமெரிக்க தோ்தல் தாக்கமும் விலை குறைவுக்கு ஒரு காரணமாக உள்ளது. இருப்பினும், வரக்கூடிய நாள்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படும் என்றாா் அவா்.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,850

1 பவுன் தங்கம்...............................38,800

1 கிராம் வெள்ளி.............................64.30

1 கிலோ வெள்ளி.............................64,300

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,915

1 பவுன் தங்கம்...............................39,320

1 கிராம் வெள்ளி.............................68.80

1 கிலோ வெள்ளி.............................68,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT