தமிழ்நாடு

கொடைக்கானலில் தாழ்வான மின்கம்பியில் சிக்கி இறக்கும் பழந்தின்னி வௌவால்கள்

23rd Sep 2020 01:32 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் தாழ்வான மின்கம்பியில் பழந்தின்னி வௌவால்கள் சிக்கி இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்கப் பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொடைக்கானல் மலைப் பகுதிகளான பெருமாள்மலை, அடுக்கம், செண்பகனூர், வட்டக்கானல், அட்டக்கடி, அப்சர்வேட்டரி, சின்ன பள்ளம், பெரும்பள்ளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்பேரிக்காய்கள் அதிகம் விளைந்து வருகின்றது. மேலும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் மரத்திலேயே பேரிக்காய் பழமாகிறது. அவக்கோடா ஆகிய பழங்களையும் இரவு நேரத்தில் உண்பதற்காக வெளவ்வால்கள் அதிகம் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், செண்பகனுர் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் தாழ்வான நிலையில் மின்கம்பிகள் செல்கிறது பழங்களை உண்பதற்காக வரும் வௌவால்கள் மற்றும் பல விதமான பறவைகள் மின்கம்பிகளில் அடிபட்டு இறந்து வருகிறது. இதனால் பழம் தின்னும் வெளவால்கள் மற்றும் பறவைகளைக் காப்பாற்றுவதற்குத் தாழ்வான தோட்டப் பகுதிகளில் செல்லும் மின்கம்பங்களை மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பறவை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

ADVERTISEMENT

நடவடிக்கை எடுப்பார்களா மின்வாரியத்துறையினர்?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT