தமிழ்நாடு

கம்பத்தில் சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்

23rd Sep 2020 03:17 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகில் சீர்மரபினர் நலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன் கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர்  ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயலாளர் செங்குட்வன், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கவுதம், கம்பம் நகரச் செயலாளர் காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் (ஓ.பி.சி.) சேர்க்க வேண்டும், 2011 - ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையை அமல் படுத்த வேண்டும், ஓ.பி.சி கிரிமிலேயரை ரத்து செய்யவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ADVERTISEMENT

இதில் சீர்மரபினர் நலச் சங்கத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT