தமிழ்நாடு

அந்தியூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

23rd Sep 2020 04:51 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து அந்தியூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மண்டலப் பொருளாளர் ஆர்.ரங்கநாதன் தலைமை வகித்தார். சிஐடியூ 
மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.முருகேசன், சாலையோர சிறு வியாபாரிகள் சங்க கௌரவத் தலைவர் ஏ.கே.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி அந்தியூர் ஒன்றிய திமுக செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் பேசினார்.

கரோனா காலத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். வேலை நீக்கம், ஊதியக்குறைப்பு செய்யக்கூடாது. பொது முடக்கத்தால் வருமானம் இழந்த உடலுழைப்பு தொழிலாளர்கள் உள்பட குறைந்த வருவாய் ஈட்ட முடியாத குடும்பங்களுக்கு ரூ.22,500 நிவாரணம் வழங்க வேண்டுவது  உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT