தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 5.50 லட்சத்தைக் கடந்தது

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 52,674- ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 5,337 போ் புதிதாக நோய்த்தொற்றுக்குள்ளானதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் இதுவரை 66.40 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8.3 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனைகளில் அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 595 பேருக்கும், திருப்பூரில் 369 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,406 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 97,377-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 46,350 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 76 போ் பலியாகியுள்ளனா்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,947-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT