தமிழ்நாடு

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்தது

23rd Sep 2020 12:59 PM

ADVERTISEMENT


சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி மீண்டும் 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது.

அதில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி 10,012 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கரோனா பாதித்தவர்களில் 1,44,511 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,091 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக 10 ஆயிரத்துக்குள் இருந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது மீண்டும் 10 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் ஆயிரத்தில் இருந்த கரோனா பாதிப்பு ஆயிரத்து நூறுக்கு மேல் உயர்ந்துள்ளதும் இதற்குக் காரணமாக உள்ளது.

ADVERTISEMENT

கோடம்பாக்கத்தில் 1,170 பேரும் அண்ணாநகரில் 1,115 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
 

Tags : chennai update coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT