தமிழ்நாடு

கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

23rd Sep 2020 11:56 AM

ADVERTISEMENT

 

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி பிரமோற்சவ தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 

கோவில் கொடிமரம் சேதமானதால் அகற்றப்பட்டு, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், தங்கக் கொடிமரம் தயாராகி வருகிறது. இதனால் ஆகம விதியை பின்பற்றி, தற்காலிக கொடிமரம் பிரதிஷ்டை செய்து, நேற்று கொடியேற்றம் நடந்தது. 

முன்னதாக கருடாழ்வார் கொடிக்குச் சிறப்புப் பூஜை செய்து, பட்டாச்சாரியார்கள் ஸ்ரீராம், பாலாஜி கொடியேற்றினர். இதையடுத்து திருத்தேர் தயார் செய்யும் பணிக்கு முகூர்த்தக் கால் போடப்பட்டது. கோவில் செயல் அலுவலர் கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT