தமிழ்நாடு

கவரப்பேட்டையில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்

DIN

திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய வேளாண்மை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து வருகின்ற 28ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் புதன்கிழமை இது தொடர்பாக ஆலோனைக் கூட்டம் கவரப்பேட்டையில் நடைபெற்றது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைக் கண்டித்து திமுக தலைமை சார்பில் அனைத்து கட்சி சார்பில் வருகின்ற 28ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,திருத்தணி தொகுதிகளில் 12 இடங்களில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் கவரப்பேட்டையில் உள்ள திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கி.வேணு தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.சி.சிதம்பரம்,   மாவட்ட துணைத் தலைவர் எம்.சம்பத், வட்டார தலைவர் எஸ்.எஸ்.பெரியசாமி, காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், போட்டோ செல்வம், விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன்,  மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், திராவிடர் முன்னாள் மாவட்ட தலைவர் உதயகுமார், மதிமுக மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், முஸ்லீம் லீக் மாவட்ட துணை செயலாளர் ஆர்.அன்வர்பாட்ஷா, ஒன்றிய செயலாளர் சையது அன்வர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கோபி நயினார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி தொகுதிகளில் 12 இடங்களில் அனைத்து கட்சிகள் சார்பில் மத்திய அரசின் புதிய 3  வேளாண் சட்டங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரோடு, விவசாயிகளையும் பங்கேற்கச் செய்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டது. கூட்ட முடிவில் திமுக மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT