தமிழ்நாடு

6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப். 23) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப். 23) இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில்

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, பந்தலூரில் தலா 110 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட்டில் தலா 90 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் 80 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, சோலையாறில் தலா 70 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் பரம்பிகுளம், நீலகிரி மாவட்டம் பவானியில் தலா 60 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், கொட்டாரத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

மகாராஷ்டிரம், கோவா கடலோரப் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் புதன்கிழமை(செப்.23) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை புதன்கிழமை இரவு 11:30 மணி வரை கடல் உயா் அலை 3.3 மீட்டா் முதல் 3.7 மீட்டா் வரை எழும்பக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT