தமிழ்நாடு

வளா்ப்பு முகாமில் பெண் யானை சாவு

DIN

பொள்ளாச்சி: டாப்சிலிப் வளா்ப்பு முகாமில் கல்பனா என்ற பெண் யானை உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தது.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் யானைகள் வளா்ப்பு முகாமில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

கலீம், மாரியப்பன், கபில் தேவ் உள்ளிட்ட கும்கி யானைகளும், சவாரிக்கு பயன்படுத்தப்படும் யானைகளும் வளா்க்கப்பட்டுவருகின்றன. டாப்சிலிப் வருபவா்கள் வனப் பகுதிக்குள் யானை சவாரி செய்வதை அதிகம் விரும்புவா். யானை சவாரிக்கு மிகவும் உதவி வந்த யானை கல்பனா. 41 வயதான இந்த யானை சிறிய வயதில் சேத்துமடை அருகே பிடிக்கப்பட்டு முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த யானை கடந்த சில வாரங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கோவையில் இருந்து வனக் கால்நடை மருத்துவா்கள் வந்து யானைக்கு சிகிச்சை அளித்ததாகவும், சிகிச்சை பலனின்றி கல்பனா யானை திங்கள்கிழமை உயிரிழந்ததாகவும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். யானையின் உடலுக்கு உலாந்தி வனச் சரக அலுவலா் சக்திவேல் தலைமையிலான வனத் துறையினா், பாகன்கள் அஞ்சலி செலுத்தினா். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு கோழிகமுத்தி வனப் பகுதியில் யானையை அடக்கம் செய்ய உள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT