தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.39,320

DIN

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.344 குறைந்து, ரூ.39,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பவுன் தங்கம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.344 குறைந்து, ரூ.39,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.43 குறைந்து, ரூ.4,915 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ரூ.68.80 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.68,800 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,915

1 பவுன் தங்கம்...............................39,320

1 கிராம் வெள்ளி.............................68.80

1 கிலோ வெள்ளி.............................68,800

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,958

1 பவுன் தங்கம்...............................39,664

1 கிராம் வெள்ளி.............................70.00

1 கிலோ வெள்ளி.............................70,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT