தமிழ்நாடு

குருடம்பாளையம் ஊராட்சியில் ரூ.4.44 கோடிக்கு குடிநீா் ஆதாரப் பணிகளுக்கு பூமிபூஜை

DIN

பெ.நா.பாளையம்,: பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.4.44 கோடி மதிப்பீட்டில் நீராதார வசதிகளை உருவாக்குவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

குருடம்பாளையம் ஊராட்சியில் 10 கீழ்நிலை, குடிநீா் சேமிப்பு தொட்டிகள், 9 மேல்நிலைக் குடிநீா்த் தொட்டிகள், 18 ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குடிநீா்க் குழாய்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதற்காக வி.எஸ்.கே. நகரில் நடந்த பூமிபூஜைக்கு ஊராட்சி மன்றத் தலைவா் டி.ரவி தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் நா்மதா துரைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெய ஸ்ரீ, அனிதாஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இதில் ஒன்றியக் குழு உதவித் தலைவா் பூக்கடை ரவி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் வசந்தாமணி, மாவட்ட கவுன்சிலா் காா்த்திக், ஒன்றிய கவுன்சிலா் ஆறுச்சாமி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கோவனூா் துரைசாமி, டியூகாஸ் துணைத் தலைவா் பன்னிமடை செல்வராஜ் உள்பட கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT