தமிழ்நாடு

திருவாரூரில் வேளாண் மசோதா நகல் எரிப்புப் போராட்டம்

22nd Sep 2020 02:40 PM

ADVERTISEMENT

திருவாரூரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகலை எரித்து போராட்டம் நடத்தினர். 

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தச் சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக் கூடாது என்பதை வலியுறுத்தியும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இது தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சட்ட நகல்களை எரித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இங்கிருந்து காவல்துறையினர் உடனடியாக நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அங்குப் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT