தமிழ்நாடு

குமுளி மலைச்சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

22nd Sep 2020 08:43 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் விழுந்த மரத்தால் திங்கள்கிழமை இரவு  2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையான லோயர் கேம்ப் குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே திடீரென திங்கள்கிழமை இரவு பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. 

இதனால் கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களும் தமிழகத்தில் இருந்து கேரளம் செல்லும் வாகனங்களும் செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.

ADVERTISEMENT


இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த குமுளி காவல்துறையினர்  இயந்திரங்களைக் கொண்டு சாலையில் விழுந்த மரத்தினை வெட்டி அகற்றி போக்குவரத்து செல்வதற்கு ஏதுவாக மரத்தினை சாலையோரமாக கொண்டு சென்றனர். 

இதன் பின்னரே வாகனப் போக்குவரத்து அப்பாதையில் தொடங்கியது. இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக குமுளி மலைச் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT