தமிழ்நாடு

உரிமைமீறல் விவகாரம்: திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை

DIN

உரிமைமீறல் குழு நோட்டீஸை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் நாளை விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளன. இந்த நோட்டீசின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டிருந்தது. 

இதனையடுத்து உரிமை மீறல் குழு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்தமுறை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி, வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில்  நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT