தமிழ்நாடு

தூத்துக்குடியில் மரச்சாமான் விற்பனைக் கடை ஊழியர் வெட்டிக் கொலை

22nd Sep 2020 09:31 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்த நந்தகுமார், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில் சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (42). இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வெளியே கிளம்பினார். 

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திடீரென அவரை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பி ஓடி விட்டனர். 

ரத்த காயம் அடைந்த நந்தகுமார் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

ADVERTISEMENT

Tags : murder
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT