தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர் 41 ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் அலுவலகம் முன்பு கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ற நியாயமான ஊதியத்தையும் ஒப்பந்தம் முடிவடைகிற தேதியிலிருந்து அமுலாக்க வேண்டும். அரியர்ஸ் தொகை கிடைக்கச் செய்ய வேண்டும். மேலாண்மை இயக்குனர் பதவியைக் கூட்டுறவுச் சங்கங்களில் திணித்து நிதிச்சுமை ஏற்றப்படும் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிகின்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வுகால பென்சன் கிடைக்கச் செய்ய வேண்டும். அரசு சிறப்பு நிதியம் உருவாக்கி பென்ஷன் திட்டத்தை அமுலாக்க வேண்டும். பணிவரன் முறைபடுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊழியர்களை பணிவரன் முறைசெய்திட வேண்டும்.

1988 கூட்டுறவு சட்ட விதி 97 படி போனஸ் தொகை ரூபாய் 1200 என்பதை மாற்றச் சட்டத் திருத்தம் உருவாக்க வேண்டும். ஊழியர்களுக்கு முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும் கரோனா கால நிவாரண நிதி கடனாக ரூபாய் 3 லட்சம் நீண்ட கால தவணையில் வழங்கிட வேண்டும். குடும்ப மருத்துவ பாதுகாப்பு திட்ட நிதியை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்.

கரோனா பாதிப்பால் உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்திற்கு 25 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் கணேசன் மோகன் உயிர்காத்தான் மற்றும் சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் திருமலை, நகரச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT