தமிழ்நாடு

திருப்பூரில் வேளாண் மசோதா நகல்  எரிப்புப் போராட்டம்

22nd Sep 2020 02:47 PM

ADVERTISEMENT

   

திருப்பூரில் தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் மத்திய வேளாண் மசோதா நகல் எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதிலும் வேளாண் மசோதா நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகசபாபதி தலைமை வகித்தார்.

இதில், பங்கேற்ற அக்கட்சியினர் கூறியதாவது:

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானதாகவே உள்ளது. ஆகவே, இந்த மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,தமிழ்ப்புலிகள் கட்சியின் நிர்வாகிகள் வேலுபிரபாகரன், வடிவேல், ரங்கராஜ், கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT