தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு

DIN

சென்னையில் கடந்த இரு மாதங்களை ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை பெருமளவு குறைந்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 குறைந்து, ரூ.38,800-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 65 குறைந்து, ரூ. 4,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ. 4.50 குறைந்து ரூ. 64.30-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 64,300-க்கு விற்பனை ஆகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. கிராமுக்கு ரூ.5,385-க்கு (சவரனுக்கு ரூ. 43,080) விற்பனை ஆனது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று கணிசமாக குறைந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் இன்றைய விலையே மிகவும் குறைவு. 

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகுக்கின்றன.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,850

1 பவுன் தங்கம்............................... 38,800

1 கிராம் வெள்ளி.............................64.30

1 கிலோ வெள்ளி............................. 64,300

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,915

1 பவுன் தங்கம்...............................39,320

1 கிராம் வெள்ளி.............................68.80

1 கிலோ வெள்ளி.............................68,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

SCROLL FOR NEXT