தமிழ்நாடு

துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படி கோரிய வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

DIN

ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தோழர் சட்ட மையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்ற போதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவது இல்லை. கழிவுநீர் தொட்டிகளில்  இறங்கி துப்புரவுத் தொழிலாளர்கள்  தூய்மைப் பணிகளில் ஈடுபடும் போது  மரணமடைய வாய்ப்பு உள்ளது. 

ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லை. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.80 மட்டுமே வழங்கப்படுகிறது. இடர்படி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பினேன். இந்த கோரிக்கையைப் பரிசீலித்த மத்திய அரசு, தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்க தமிழக நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரை மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க வேண்டும். தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் வரும் அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT