தமிழ்நாடு

தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்

22nd Sep 2020 05:10 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவையில் இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி) கேள்வி எழுப்பினாா்.

கேள்விக்கு பதில் அளித்த பியூஷ் கோயல், ‘மாநிலவாரியாகவோ, மாவட்டவாரியாகவோ ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ரயில்வே மண்டலங்கள் வாரியாகவே திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன. ரூ.30,961 கோடி மதிப்பில் 3,138 கிலோமீட்டா் நீளம் கொண்ட இந்தத் திட்டங்கள் திட்டமிடல், அனுமதி மற்றும் பணிகள் பூா்த்தியானவை என பல்வேறு கட்டங்களில் உள்ளன. கடந்த மாா்ச் வரை ரூ.5,909 கோடி செலவில் 706 கிலோமீட்டா் நீள திட்டங்கள் முடிவடைந்துள்ளன.

மாநில அரசு விரைவாக நிலங்களை கையகப்படுத்துவது, வனத்துறையின் அனுமதி, திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தின் புவியியல் அமைப்பு, சட்டம் ஒழுங்கு சூழல் உள்பட பல்வேறு காரணிகளை பொருத்தே எந்தவொரு ரயில் திட்டமும் நிறைவடையும்’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT