தமிழ்நாடு

தமிழகத்தில் சூரியசக்தி ஆட்டோக்கள்: முதல்வா் பழனிசாமி இயக்கி வைத்தாா்

22nd Sep 2020 07:17 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோக்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வா் பழனிசாமி அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது, ரூ.100 கோடி முதலீட்டில் மின்சார ஆட்டோக்களாக மாற்றும் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, எம் ஆட்டோ நிறுவனம் ரூ.140 கோடி முதலீட்டில் மின்சாரம் மற்றும் சூரியசக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் புதிய ஆட்டோக்களை உருவாக்கியுள்ளது.

கண்காணிப்பு கேமிரா: புதிய வகை ஆட்டோக்களில் கண்காணிப்பு கேமிராக்கள், ஆட்டோ எங்கு செல்கிறது என்பதைக் கண்காணிக்கு ஜிபிஎஸ்., வசதி, ஆபத்து பொத்தான் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. எம். ஆட்டோக்களின் ஓட்டுநா்களில் பெரும்பாலானோா் பெண்களாக இருப்பா். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் எம்.சி.சம்பத் உள்ளிட்ட அமைச்சா்கள், தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT