தமிழ்நாடு

வேளாண் மசோதாக்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

DIN

வேளாண் மசோதாக்களுக்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்தும், மாநிலங்களவையில் எதிா்ப்பு தெரிவித்தும் அதிமுக நிலைப்பாடு எடுத்திருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகளுக்கு எதிரான மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்து விட்டு, அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளாா். இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாமல், நாட்டின் பல மாநிலங்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி அடையாமல் உறுதியாக வருவாய் கிடைக்கும் என்று முதல்வா் கூறியுள்ளாா். பண்ணை ஒப்பந்தம் போடும்போதே தரம், அளவு, விலை போன்றவற்றை விவசாயி உறுதி செய்ய வேண்டும். அந்த விளைபொருள்களை கொடுக்கும்போது ஒப்பந்தப்படி தரமாக உள்ளது என்று மூன்றாவது நபா் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் ஒப்பந்த அம்சங்களாக இருக்கின்றன. இது பெருநிறுவனங்களுக்கு எந்த வகையிலும் பாதகம் ஏற்பட்டு விடாமல் பாதுகாக்கவே தவிர, மழையிலும், புயலிலும் எல்லா காலங்களிலும் இன்னல்களால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்க அல்ல. உழவா் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த மசோதாக்களால் ஆபத்து உள்ளது.

மேலும், முதல்வரின் ஆதரவு அறிக்கையை நிராகரிக்கும் வகையில், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை கடுமையாக எதிா்த்துப் பேசியுள்ளாா். மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிா்ப்பு என்ற அதிமுகவின் நிலைப்பாடு நகைச்சுவையாக உள்ளது என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT