தமிழ்நாடு

100 அடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிருடன் மீட்பு

21st Sep 2020 06:14 PM

ADVERTISEMENT

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேடபாளையத்தில் 100 அடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் திங்கள்கிழமை உயிருடன் மீட்கப்பட்டான்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேடபாளையத்தில் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான வில்வமரத்தோட்டத்தில் 100 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது. அதன் அருகே வாடகை வீட்டில் வசிக்கும் சேவியர் மகன் ஜோவித் (9) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான்.

ADVERTISEMENT

பள்ளி விடுமுறையால் சக பள்ளி நண்பர்களுடன் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிள்ளான். அப்போது எதிர்பாரவண்ணம் ஜோவித் 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

இது பற்றி தகவலறிந்து வந்த பல்லடம் தீயணைப்பு படையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஜோவித்யை உயிருடன் மீட்டனர். 108 ஆம்புலென்ஸ் வாகனத்தில் ஜோவித்யின் காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT