தமிழ்நாடு

சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

21st Sep 2020 06:20 PM

ADVERTISEMENT

 

கழுமலையாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விரக்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சீர்காழி பொதுப்பணித்துறையை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சீர்காழியில் உள்ள பிரதான பாசன வாய்க்காலான கழுமலையாறு பாசன வாய்க்கால் தண்ணீர் மூலம் செம்மங்குடி, திட்டை, தில்லைவிடங்கன், சிவனார்விளாகம், திருத்தோணிபுரம், கைவிளாஞ்சேரி, தென்பாதி, அகணி, தென்னங்குடி, கோவில்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றுவருகிறது. 

நிகழாண்டு கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்துசேரவில்லை. இதனால் திட்டை, தில்லைவிடங்கன், கைவிளாஞ்சேரி, செம்மங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கல் தண்ணீர் இன்றி சம்பா சாகுபடி பணி மேற்கொள்ளமுடியாதநிலை நீடிக்கிறது.  

ADVERTISEMENT

வேதனையடைந்த விவசாயிகள்  பலமுறை பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்தும் தண்ணீர் இதுவரை விடப்படவில்லை.சம்பா சாகுபடிக்கு தயார் செய்த நாற்றாங்காலும் தண்ணீரின்றி கருகிவருகிறது. இந்நிலையில்  சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்த கழுமலையாறு பாசன விவசாயிகள் 80க்கும் மேற்பட்டவர்கள் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (பொ) மரியசூசையிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

உடனடியாக கருகிவரும் சம்பா நாற்றாங்காலை காப்பாற்ற முறைவைக்காமல் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் திறந்துவிடவேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தினையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மரியசூசை,உதவி பொறியாளர் சரவணன், மணஞ்சேரியிலிருந்து ஊசிவாய்க்கால் மூலம் கழுமலையாற்றிற்கு 300கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை மாலைக்குள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்துசேரும்.முறை வைக்காமல் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT